இந்திய பொருளாதாரத்துக்கு வேலைவாய்ப்பு இதயம் போன்றது- நிதின் கட்காரி

இந்திய பொருளாதாரத்துக்கு வேலைவாய்ப்பு இதயம் போன்றதென மத்திய  அமைச்சர் நிதின் கட்காரி  தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இணைய உரையாடல் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்ச்சியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்திய பொருளாதாரத்துக்கு வேலைவாய்ப்பு, வளர்ச்சி, நிலைத்தன்மை ஆகியவை இதயம் போன்றவை. இவற்றுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய புதிய சமூக உடன்பாட்டை உருவாக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாக வேளாண்மை, ஊரக, பழங்குடியின பகுதிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

கிராமப்புற பகுதிகளில் வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன், பெருநகரங்களில் மக்கள் நெரிசலை குறைக்கும். ஸ்மார்ட் சிட்டி, ஸ்மார்ட் கிராமங்கள் மூலம் புதிய பொருளாதார மையங்கள் உருவாக்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.