மன்னாரில் பாடசாலை ஒன்றில் தொழில்நுட்பக் கூடம் ஆளுநரால் திறந்துவைப்பு!

மன்னார், கருங்கண்டல் றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய பாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில்நுட்பக் கூடத்தை வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் திறந்துவைத்தார்.

மடு கல்வி வலயத்திற்குட்பட்ட குறித்த பாடசாலையில் அமைக்கப்பட்ட தொழில் நுட்பக்கூடம் நேற்று (வியாழக்கிழமை) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் ஜீ.குணசீலன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வட மாகாண ஆளுசர் பி.எச்.எம்.சாள்ஸ் பிரதம வருந்தினராக கலந்துகொண்டு குறித்த தொழில்நுட்பக் கூடத்தை திறந்து வைத்தார்.

இதன்போது மடு வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சத்தியபாலன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.