கொரோனா வைரஸ்: குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் 46 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இதுவரை 1196 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
மேலும் இதுவரை 1877 பேர் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டதுடன், இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 670 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை