வவுனியாவில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 7 பேர் விடுவிப்பு

வவுனியாவைச் சேர்ந்த 7பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மின்னேரிய இராணுவ முகாமில் 14 நாட்களில் தனிமைப்படுத்தலில் இருந்த  7 பேரும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை, வவுனியா பொலிஸ் நிலையத்தினூடாக விடுவிக்கப்பட்டுள்ளனர் .

மின்னேரிய இராணுவ முகாமில் இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்கள் உட்பட வவுனியாவை சேர்ந்த 7 பேர், கொரோனா தொற்று காரணமாக கடந்த 14 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் .

குறித்த 7 பேரும்,  இன்றைய தினம் அவர்களது தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வவுனியா பொலிஸ் நிலையத்தின் ஊடாக வதிவிடங்களை உறுதிப்படுத்திய பின்னர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.