மக்களின் குறைகளை தீர்க்க ஒம்புட்ஸ்மன் நியமனம்
பொதுமக்களின் முறைப்பாடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக ஜனாதிபதி செயலணிக்கு ஒம்புட்ஸ்மன் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பதவிக்கு ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்க, ஒம்புட்ஸ்மனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு உரிய முறையில் தீர்வுகள் வழங்கப்படுவதில்லை என தொடர்ந்து பலரினால் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வந்த நிலையிலேயே ஒம்புட்ஸ்மன் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை