பிலிப்பைன்ஸில் இருந்து 223 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து 223 இலங்கையர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்துக்கு சொந்தமான யூ.எல்.1423 என்ற இலக்க விமானத்தில் பிலிபைன்ஸ் மணிலாவில் இருந்து இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு வருகை தந்த 223 பேரும்,  பி. சி. ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் பி. சி. ஆர்.பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை ஹோட்டல்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கல்வி நடவடிக்கை மற்றும் கப்பல் தொழிலில் ஈடுப்பட்டிருந்த இலங்கையர்களே, பிலிப்பைன்ஸில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.