தீர்க்கப்படாத காணிப் பிணக்குகள்: ஆளுநர் செயலக விசேட குழு கிளிநொச்சியில் விசாரணை

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தீர்க்கப்படாத 55 காணிப் பிணக்குகள் ஆளுநர் செயலக விசாரணைக் குழுவினால் விசாரணைக்கு  உட்படுத்தப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தால் நியமிக்கப்பட்ட இளைப்பாறிய நீதிபதி வசந்தசேனன் தலைமையிலான குறித்த குழு இன்று (வெள்ளிக்கிழமை) கண்டாவளை பிரதேச செயலகத்தில் விசாரணையை மேற்கொண்டிருந்தது. இன்று காலை 9 மணிமுதல் குறித்த விசாரணைகள் இடம்பெற்றன.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் இதுவரை தீர்க்கப்படாத 55 காணிப் பிணக்குகள் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் குறித்த காணிப் பிணக்கினை உரிமைகோரும் தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த குழுவினர் விசாரணையை மேற்கொண்டிருந்தனர். அழைக்கப்பட்டிருந்த 55 பிணக்குகளில் 44 பேர் இன்று சமூகமளித்திருந்தனர்.

வடக்கு மாகாணத்தில் தீர்க்கப்படாத காணி பிணக்குகள் தொடர்ந்துவரும் நிலையில் ஆளுநரினால் இளைப்பாறிய நீதிபதி தலைமையில் விசாரணை குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. குறித்த குழு தற்போது தீர்வு பெற்றுக்கொடுப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.