சங்கிலிய மன்னனின் 401 ஆவது நினைவு தினம் மன்னாரில் அனுஷ்டிப்பு
ஈழத்து தமிழ் மன்னன் சங்கிலியனுடைய 401 ஆவது சிரார்த்த நினைவு தினம், மன்னாரில் இன்று (சனிக்கிழமை) காலை அனுஷ்டிக்கப்பட்டது.
மன்னார் தேசிய சைவ மக்கள் கட்சியின் ஏற்பாட்டில் அதன் தலைவர் பிரம்ம சிறி ஐங்கசர சர்மா தலைமையில் மன்னார், கீரி கடற்கரையில் குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இதன்போது சங்கிலிய மன்னனுடைய நிழல் படத்திற்கு மாலை அணிவித்து, விசேட பூஜை வழிபாடுகள் எழுத்தூர் அம்மன் கோயில் பிரதம குரு விஜயபாகுவினால் நடாத்தப்பட்டு, சிரார்த்த சடங்குகள் செய்யப்பட்ட பின்னர் கிரிகை பொருட்கள் அனைத்தும் கடலில் கரைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த கிரிகை நிகழ்வில் தேசிய சைவ மக்கள் கட்சியின் உறுப்பினர்கள், இந்து இளைஞர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு சங்கிலிய மன்னனுடைய திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை