நான் இரட்டை பிரஜாவுரிமையுள்ள ஒரு குடிமகன்-ரத்ன ஜீவன் ஹூல்

நான் இரட்டை பிரஜாவுரிமையுள்ள ஒரு குடிமகன் என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையை விட்டு இருமுறை வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டமையினால், இரட்டை குடியுரிமை பெறவேண்டி ஏற்பட்டதாக அவர்  சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இந்நாட்டிலே வாழ்ந்து,  உயிரிழப்பதற்கு விருப்பம் இருந்தாலும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் வேறு வழியின்றி  இரட்டை குடியுரிமையை வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல், நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தங்களது கட்சிக்கு வாக்களிக்க வேண்டாமென நேரடியாக கூறயதாக பொதுஜன பெரமுனவை சேர்ந்த பலர் விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.

ஆனால் அவ்வாறு தான் தெரிவிக்கவில்லை எனவும் ஏமாற்றுபவர்களுக்கும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கும் வாக்களிக்க வேண்டாம் என்றே மக்களுக்கு கூறியதாக  பேராசிரியர் ஹூல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஹூலுக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் எதிராக மற்றைய தரப்பினரும் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.