நாட்டின் மோசமான ஆட்சியே அமைதியின்மைக்கு காரணம்- சஜித்
நாட்டில் தற்போது, மோசமான ஆட்சி நிலவுகின்றமையினால்தான் அமைதியின்மை நிலவுகின்றதென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சஜித் மேலும் கூறியுள்ளதாவது, “ பொருளாதாரம் வீழ்ச்சி பாதையை நோக்கி நகர்ந்து செல்கின்றது.
இதனால் மக்களும் அச்சத்துடன் வாழவேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. அதாவது, பெரும்பான்மையான மக்கள் வருமான இழப்பினை சந்தித்துள்ளனர்.
அவர்கள் தங்கள் குடும்பங்களிற்கு உணவை வழங்க முடியாத நிலையில் உள்ளனர். இந்த மக்களிற்கு அரசாங்கம் சலுகைகளை வழங்க தவறியுள்ளது.
மேலும் மனிதாபிமானமற்ற அணுகுமுறையை அரசாங்கம் பின்பற்றுகின்றது” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை