மூதூர் பிரதேச சபையின் புதிய உறுப்பினராக NFGG ன் சார்பில் அஹ்ஸன் அப்துல் லத்தீப் பதவிப் ஏற்பு
ஹஸ்பர் ஏ ஹலீம்_
2018ம் ஆண்டு மூதூர் பிரதேச சபைக்கான தேர்தலில் ஜாயா வட்டாரத்தில் போட்டியிட்டு 762 வாக்குகளை பெற்ற நிலையில் 1 வாக்கினால் வெற்றி வாய்ப்பினை இழந்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வேட்பாளர் ஏ.எல்.எம். அஹ்சன் ஆசிரியர் கடந்த (10) மூதூர் பிரதேச சபையின் உறுப்பினராக பதவியேற்றார்.
நல்லாட்சிக்கான தேசிய முண்னணிக்கு கிடைத்த 01 போனஸ் ஆசனத்தின் அடிப்படையில் NFGG ன் சார்பில் அத் தேர்தலில் பெரியபால வட்டாரத்தில் போட்டியிட்ட அமைப்பின் அங்கத்தவர் எம்.எம்.எம். நசீர் ஒப்பந்த அடிப்படையில் முதல் இரண்டு வருடத்திற்கு அப்பதவியினை பொறுப்பேற்றார்.
நசீர் அவர்களுடைய இரண்டு வருட பதவிக்காலம் முடிவடைந்த சந்தர்ப்பத்தில் மிகுதி இரண்டு வருடங்களையும் அஹ்சன் அப்துல் லத்தீப் அப்பதவிக்காக நியமிக்கப்பட்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை