பொதுத்தேர்தலில் அரசாங்கம் தோல்வியடைவது உறுதி- கயந்த
மக்களை ஏமாற்றியே இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது. எனவே தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசாங்கம் நிச்சயம் தோல்வியடையுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னர் அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களின் விலையை மீண்டும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளது.
அத்துடன் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும் நோக்கத்துடனேயே தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.
எனினும் தற்போது 113 ஆசனங்களை பெறுவதற்கு கூட அரசாங்கம் நெருக்கடியை சந்தித்துள்ளது. தற்போது ஐக்கிய மக்கள் சக்தி வலுவான கூட்டணியாக மாறிவருகின்றது.
மேலும் கடந்த தேர்தலில் மக்களை ஏமாற்றியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது” என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை