செப்டெம்பரில் பாடசாலைகளை திறப்பது குறித்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கலந்துரையாடல்
அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் செப்டெம்பரில் மீண்டும் திறக்கப்படுவதை உறுதிசெய்யம் முகமாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கல்வி அமைச்சர் கவின் வில்லியம்சனுடன் கலந்துரையாடி வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் மாதத்தில் அனைத்து மாணவர்களும் பாதுகாப்பாக இருந்தால் பாடசாலைகளுக்கு திரும்ப முடியும் என்பதை உறுதிசெய்ய முக்கிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக மார்ச் மாதத்தில் நாட்டில் உள்ள பெரும்பாலான பாடசாலைகள் மூடப்பட்டன, இந்நிலையில் ஜூன் மாதத்தில் இருந்து சில மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்கு வரமுடியும் என தீர்மானிக்கப்பட்டபோதும் பலர் எதிர்ப்புக்களை வெளியிட்டனர்.
உலகின் மிக மோசமான இறப்பு எண்ணிக்கையில் பிரித்தானியாவும் உள்ள நிலையில் வைரஸின் இரண்டாவது அலைகளைத் தடுக்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியம் குறித்தும் விமர்சகர்கள் எச்சரித்துள்ள நிலையில் படிப்படியாக பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசனைகள் இடம்பெற்றுவருகின்றன.
கருத்துக்களேதுமில்லை