குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களுக்கு ஒன்ராறியோ அரசாங்கம் நிதியுதவி வழங்க முடிவு!
நிதிப் பற்றாக்குறையால் சிரமப்படும் மற்றும் மூடப்பட்டுள்ள குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களுக்கு ஒன்ராறியோ அரசாங்கம் நிதியுதவி வழங்கவுள்ளது.
ஒன்ராறியோ மாநிலம் கொரோனா வைரஸூக்கு எதிராக தீவிரமாகப் போராடிவரும் நிலையில் குழந்தைகள் பராமரிப்புக்கு முன்னுரிமையளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இதன்படி, நிதிப் பிரச்சினையால் பல பராமரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் திறப்பது குறித்து ஒன்ராறியோ கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெக்ஸின் (Stephen Lecce) செய்தித் தொடர்பாளர் அலெக்ஸாண்ட்ரா அதமோ (Alexandra Adamo) தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த வியாழக்கிழமை இரவு புதிய பராமரிப்பு விபரங்களுடன் குழந்தைகள் தினப்பராமரிப்பு நிலையத்தினருக்கு ஒரு அறிவிப்பு அனுப்பப்பட்டது.
அந்த அறிவிப்பில், கூடுதல் பணியாளர்கள், துப்புரவு, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நிதியுதவியை எதிர்பார்க்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, குழந்தை பராமரிப்பு மையங்களை மீண்டும் திறப்பதற்கு முன்னதாக அந்த செலவுகளை யார் செலுத்துவார்கள் என்று பெற்றோர்களும் தினப் பராமரிப்பாளர்களும் கேள்விகளை எழுப்பினர்.
அந்த கேள்விகளின் காரணமாக, இப்போது செயற்பட முடியும் என்று மாகாண அரசு கூறினாலும் பல தினப்பராமரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் திறந்திருக்கும் நிலையங்களுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் தயங்குகிறார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை