தியாகங்களால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்புக்குள் இன்று சுயநல அரசியலே இடம்பெறுகின்றது – கணேசமூர்த்தி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல தியாகங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டிருந்தது ஆனால் இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருப்பவர்கள்  அனைத்தையும் மறந்து தங்களின் சுயநல அரசியலை முன்னெடுத்துக்கொண்டு  தமிழ்மக்களை முட்டாளாக்கும் வேலைகளைச் செய்துவருகின்றனர் என  முன்னாள் பிரதி அமைச்சர் சோ.கணேசமூர்த்தி   தெரிவித்துள்ளார்.

துறைநீலாவணையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் “ தமிழ் மக்கள் 70 வருடமாக  அஹிம்சை மற்றும் ஆயுதப்போராட்டங்களை செய்து எத்தனையே உயிர்களையும் உடமைகளையும் இழங்து தெருவில் நிற்கும் எங்களுக்கு நாங்கள் எதிர்பார்த்த உரிமையினைப் பெறவேண்டும்.

அப்போதுதான் எமது இனம் நிம்மதியயயாக வாழும் நான் உரிமைப் போராட்டத்திற்கு எதிரானவன் அல்ல எமது உரிமையுடன் எமது இனத்தின் அபிவிருத்தியையும் இலக்காகக் கொண்டு பல்வேறுபட்ட அபிவிருத்திகளைச்  செய்திருக்கின்றேன்.

நான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினையும் அதனை உருவாக்கிய தந்தைசெல்வர் ஐயா அமிர்தலிங்கம் போன்ற தலைமைகளை மதிப்பவன் ஆனால் இன்று இருக்கும் தமிழ்கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் உருப்படியாக எதனையும் செய்யவில்லை அரசியல் தீர்வு அந்தாவரும் இந்தாவரும் என்று கூறிக்கொண்டு தேர்தலில் வெற்றிபெறும் உத்திகளை செய்துவருகின்றனர்.

இன்று சிலர் தங்களது சுயநல அரசியலை தக்கவைப்பதற்காக நான் தமிழ்மக்களுக்கும் உரிமையை வென்றெடுப்பதற்கும் எதிரானவன் என்ற எண்ணப்பாங்கில் பேசுகின்றனர் நான் அவ்வாறு இல்லை எமது 70 வருட உரிமைப்போராட்டத்திற்கான பயணத்திற்கு எனது முழு ஆதரவும் இருக்கும் அத்தோடு மட்டக்களப்பின் அபிவிருத்தியிலும் கண்ணாக இருந்து செயற்படுவேன்

மட்டக்களப்பில் இருந்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் சரியாக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை நான் ஒரு  அமைப்பாளராக இருந்து செய்ததில் சிறிதளவும் செய்யப்படவில்லை இதனைக் கருத்தில் கொண்டு ஆளுமையுள்ள தலைமைகளை மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கவேண்டும் அப்போதுதான் அனைத்து விடயங்களிலும் எமது சமூகம் முன்னேறும்”  என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.