சம்மாந்துறை பிராந்தியத்தில் SLPP கட்சி அங்கத்துவ அட்டை வழங்கி வைப்பு…
சம்மாந்துறை பிராந்தியத்தில் பொதுஜன பெரமுன கட்சி அங்கத்துவ அட்டை அடையாள அட்டை வழங்கி வைக்கும் நிகழ்வு (15) மாலை அக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி வேட்பாளர் யு.எல் அஸ்பர் (ஜே.பி) அவர்களின் தலைமையில் அவர்களின் அலுவலகத்தில் இடம் பெற்றது.
இன் நிகழ்வில் உரையாற்றிய வேட்பாளர் யு.எல் அஸ்பர்
இன ஐக்கியத்தை இந்த நாட்டில் ஏற்படுத்த இந்த தேர்தல் களம் எமக்கான ஓர் பெரும் வாய்ப்பாகும் இதனை நாம் சரியாக பயன் படுத்த வேண்டும்.கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் எடுத்த தீர்மானம் இன்று எம் ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தையும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்..
முன்னால் அமைச்சர் தலைவர் மர்ஹூம் MHM அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பின் சரியான வழிகாட்டல் இல்லாத காரணத்தால் இன்று நாட்டின் பெரும் பான்மை சமூகத்திடம் நம்பிக்கை துரோகிகளாகவும்,நன்றி அற்றவர்களாகவும்,இனவாதிகளாகவும் நாம் பெரும் வடுக்களை சுமந்து வழுகின்றோம்.
இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைக்கு விடை காணவேண்டும் என்பதுதான் இந்த தேர்தல் களத்தின் தேவையாக இருக்கிறது
நாம் எல்லோரும் ஒற்றுமை பட்டு பொதுஜன பெரமுன எனும் எமது ஆளும் கட்சிக்கு ஆதரவு கொடுப்பது காலத்தின் கட்டாய தேவை என்பதை உணர்ந்து மிக நிதானமாக செயற்பட்ட வேண்டும்.
அதன் மூலம் எமது சமூகம் சமயம் கலாச்சாரம் மேலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்பதை உறுதியாக நம்புகிறேன் .என தெரிவித்தார்
இன் நிகழ்வில் இளைஞர்கள் அதிகமானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை