இளைஞன் கடத்தப்பட்ட சம்பவம் – ஹிருணிகாவிற்கு நீதிமன்றம் அழைப்பாணை
இளைஞன் ஒருவனை கடத்தி சிறை வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ஹிருணிகா பிரேமசந்திரவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அழைப்பாணை விடுத்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி, ஹிருணிக்காவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்றில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பாகவே ஜூலை மாதம் 10 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன உத்தரவிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை