பளையில் இராணுவத்தினருடையது என சந்தேகிக்கப்படும் அடையாள அட்டை உள்ளிட்ட பொருட்கள் மீட்பு
கிளிநொச்சி – பளையில் இராணுவத்தினருடையது என சந்தேகிக்கப்படும் அடையாள அட்டை உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புலோப்பளை காற்றாலை அமைந்துள்ள பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவால் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட காணியினை சுத்தம் செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இதன்போது, கேகாலை மாவட்டதைச் சேர்ந்த ஒருவரின் தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், இராணுவத்தால் விடுமுறைக்கு செல்வதற்காக வழங்கப்படும் அனுமதி பத்திரம், இராணுவம் தண்ணீர் கொண்டு செல்லும் போத்தல், நெஞ்சு கவசம் மற்றும் 3 கைக்குண்டுகள் போன்றவை அடையாளங்காணப்பட்டுள்ளன.
இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக காணி உரிமையாளர் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பல கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் இன்றைய தினம் நீதிமன்றில் அனுமதி பெற்று, குறித்த பொருட்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பளை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துக்களேதுமில்லை