120 கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட 290 பேர் டுபாயிலிருந்து நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக டுபாய் நாட்டில் சிக்கித் தவித்த 290 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் இன்று (வியாழக்கிழமை) காலை 5.35 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமானம் நிலையத்தை வந்தடைந்தனர்.
இதனையடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவர்களுக்கு பயணிகள் சுகாதார அதிகாரிகளால் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவர்களை விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள 4 ஹோட்டல்களில் தற்காலிகமாக தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் 120 கர்ப்பிணி தாய்மார்களும் அடங்குவதாக ஜனாதிபதி மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மடகஸ்கார், உகண்டா மற்றும் இந்தியாவிலிருந்தும் மேலும் சிலர் எதிர்வரும் வாரத்தில் நாடு திரும்பவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை