பணத்திற்காக 2011 உலகக் கிண்ணத்தை இந்தியாவுக்கு விற்றோம் – மஹிந்தானந்த

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில், பணத்திற்காக கிண்ணத்தை தாரைவார்த்ததாக முன்னாள்   அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் கிண்ணத்தை  வெற்றிகொள்வதற்கான தகுதி இலங்கை அணியிடம் காணப்பட்ட போதிலும், பணத்திற்கான அது தாரைவார்க்கப்பட்டதை தாம் பொறுப்புடன் கூறுவதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விவாதத்தில் ஈடுபடுவும் தாம் தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் வீரர்களை இணைத்துக் கொள்ளவில்லை எனவும் ஒருசில தரப்பினரால் இந்த விடயம் மேற்கொள்ளப்பட்டதாகவும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இதன்போது  குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தானந்த அளுத்கமகேவின் கருத்துக்கு   இலங்கை அணியின் முன்னாள் தலைவர்  மஹேல ஜெயவர்த்தன தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.