மத்தியவங்கி பிணைமுறி மோசடி – மைத்திரி மற்றும் ரணிலிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவு
மத்தியவங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார ஆலோசகர் பாஸ்கரலிங்கம், மக்கள் வங்கியின் முன்னாள் பொதுமுகாமையாளர் ஆகியோரிடமும் வாக்குமூலத்தை பெறுமாறும் சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை