ஒன்றாகப் பயணிக்கவிருந்த பயணத்தை ரணில் தலைமையிலான குழு பிரித்துவிட்டது- சஜித் குற்றச்சாட்டு

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைந்து பயணிக்கவிருந்த பயணத்தை சின்னாபின்னமாக்கியது ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினரே என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ரத்கம பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் அவர் கூறுகையில், “ஐக்கிய தேசியக்கட்சி பலம் இழந்தமைக்கு ரணில் தலைமையிலான குழுவினரே காரணமாகும். அத்தகையவர்கள் யார் என்பதை நன்கு அவதானித்துப் பார்த்தால் தெரியும்.

மேலும், ஜனாதிபதித் தேர்தலின்போது இரு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டது. அதாவது ஒருபக்கம் ஜனாதிபதி வேட்பாளராக நாடு முழுவதும் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து பிரசாரங்கள் செய்யப்பட்டது.

அதேபோன்று, கட்சிக்குள்ளும் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்திலும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது. அதாவது எனக்கு எதிரான செயற்பாடுகள் சில கட்சிக்குள்ளே முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில், இறுதித் தருணத்திலேயே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு, தள்ளிவிடப்பட்டேன். ஆனால் தற்போது அவ்வாறான ஒரு நிலைமை இல்லை. அதனை நினைத்து மகிழ்ச்சி அடைகின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.