உள்ளுர் வங்கிகளிடம் கடன் பெறுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம்!

உள்ளுர் வங்கிகள், உள்நாட்டில் இயங்கும் வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை கடன் பெறுவதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் கடன்தொகை 2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாக நிதி அமைச்சு   வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட வங்கிகள் நிதி நிறுவனங்கள் எதிர்வரும் 30 ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு முன்பாக தங்களது திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு திட்டங்களை முன்வைக்கும் தரப்பினரிடம் இருந்து தலா 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை பெற்றுக்கொள்வதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் கடன் தொகையானது ஒரு தடவையில் அல்லது தவணை முறையில் செலுத்தப்படும் எனவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.