கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 950 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதாவது குவைட்டிலிருந்து நாடு திரும்பிய இரண்டு பேரும் மும்பையில் இருந்து வருகை தந்த ஒருவரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினம், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்த மேலும் 25 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய இதுவரை, 1446 பேர் குணமடைந்துள்ளனர். 493 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை