மஹிந்த தலைமையில் மொட்டுவின் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுத்தேர்தலுக்கான பிரசாரம், இன்று (சனிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

குறித்த தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அநுராதபுரம் ஜயஸ்ரீ மகா போதிய விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சர்வமதப் பிரார்த்தனையில் ஈடுபடவுள்ள அக்கட்சியினர், பின்னர் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் குருநாகல் மாவட்டத்தில், இலக்கம் 17இல் போட்டியிடவுள்ள பிரதமர் மஹிந்த, அம்மாவட்டத்துக்கான தேர்தல் அலுவலகத்தைத் திறந்துவைத்ததன் பின்னர், தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.