இந்தியாவில் தங்கியிருந்த 194 இலங்கையர் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டிற்கு வரமுடியாமல் இந்தியாவில் தங்கியிருந்த 194 இலங்கையர் இன்று (சனிக்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தங்கியிருந்த 150 பேரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தங்கியிருந்த 44 பேருமே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானங்கள் இரண்டில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதேவேளை, இங்கிலாந்தில் தங்கியிருந்த மேலும் 60 இலங்கையர்களும் இன்று காலை நாட்டுக்கு வந்துசேர்ந்தனர்.
இவ்வாறு வருகை தந்த அனைவரும் விமான நிலைய வளாகத்தில் வைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துக்களேதுமில்லை