மேலும் 289 பேர் நாட்டை வந்தடைந்தனர்

கொரோனா தொற்று காரணமாக இலங்கைக்கு வர முடியாமல் ஆப்பிரிக்காவில் தங்கியிருந்த பணியாளர்கள் 289 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

இவ்வாறு வருகை தந்த அனைவரும், கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்தே, பீ.சீ.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோன்று இந்தியாவில் தங்கியிருந்த 194 இலங்கையர்களும்  இங்கிலாந்தில் தங்கியிருந்த  60 இலங்கையர்களும் நேற்று நாட்டை வந்தடைந்திருந்தனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானங்கள்  ஊடாகவே கட்டுநாயக்க விமான நிலையத்தை இவர்கள் வந்தடைந்தனர்.

நேற்று வருகை தந்த அனைவரும்,  பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.