கொரோனா தொற்று உறுதியான எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான எவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 65 நாட்களுக்கு பின்னர் நேற்றை தினம் முதல் தற்போது வரை எவரும் அடையாளம் காணப்படவில்லை என அவ்வமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 950 ஆக காணப்படுகின்றது.
இதனிடையே, நேற்றைய தினத்தில் 26 நோயாளர்கள், தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,472 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை