PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு சுகாதார அமைச்சுக்கு பிரதமர் அலுவலகம் வலியுறுத்தல்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை 1,000 ஆக அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சுக்கு  பிரமதர் அலுவலகம்  ஆலோசனை வழங்கியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக  பிரதமர் அலுவலகத் தகவல்கள் மேலும் தெரிவிப்பதாவது, ‘ குறித்த செயற்பாட்டுக்காக  8 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவொன்றை முதலில் நியமிக்க, சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் PCR பரிசோதனை அறிக்கையை 2 மணித்தியாலங்களுக்குள் பயணிகளிடம் ஒப்படைப்பதற்கான திட்டமொன்றை உடனடியாக வகுக்க வேண்டும்.

மேலும் நாட்டுக்கு வருகைதரும் பயணிகளுக்காக, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீளத்திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனினும், அடுத்த மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் விமான நிலையத்தை மீளத் திறக்குமாறு சுற்றுலாத்துறை பிரதிநிதிகள் கோரியுள்ளனர்.

உலகின் பல நாடுகளிலும் விமான சேவைகளுக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கோரிக்கை தொடர்பில் பரிசீலிக்கப்படும்” என பிரதமர் அலுவலகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.