இலங்கை இராணுவத்திற்கு ஆவின்பாலை விற்பனை செய்வதற்கான யோசனையை நிராகரித்தார் எடப்பாடி!
இலங்கை இராணுவத்திற்கு நாளொன்றிற்கு ஒரு இலட்சம் ஆவின்பாலை விநியோகிப்பதற்கான வியாபாரயோசனையொன்று முன்வைக்கப்பட்டது என தமிழக அமைச்சர் இராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
எனினும், இராணுவத்திற்கு ஆவின்பால் விற்பனை குறித்து முன்வைக்கப்பட்ட யோசனையை தமிழ்நாடு அரசு நிராகரித்துள்ளது.
தனியார் அமைப்பொன்று இந்த யோசனையை தங்களிடம் முன்வைத்தது எனத் தெரிவித்துள்ள தமிழக அமைச்சர், எனினும் “இலட்சக்கணக்கில் தமிழர்களை கொன்றுகுவித்த இலங்கை இராணுவத்திற்கு பால்விநியோகம் செய்வதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்” என தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதனை நிராகரித்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்று தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளிற்கு ஆவின்பாலை விநியோகிப்பதற்கான யோசனை குறித்து ஆராயப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன், சிங்களவர்கள் உட்பட சாதாரண மக்களிற்கு தாங்கள் ஆவின்பால் விநியோகத்தினை மேற்கொள்ளத் தயாராகவிருப்பதாக அமைச்சர் இராஜேந்திர பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை