வாக்குகளை எண்ணும் நடவடிக்கை குறித்து மஹிந்த தேசப்பிரிய கருத்து

தேர்தல் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை தேர்தல் தினத்திற்கு மறு தினம் ஓகஸ்ட் 6ஆம் திகதி முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட செயலகத்திற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல் முன்னெடுக்கப்படும் விதம் தொடர்பாக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இம்முறை பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? என ஜூன் மாதம் 25ஆம் திகதி இடம்பெறவுள்ள கூட்டத்தில் தீர்மானிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.