ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமை நீக்கத்திற்கு எதிரான மனு நிராகரிப்பு
முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும் பண்டார உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 99 பேரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வது தொடர்பான மனுவை, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இன்று (திங்கட்கிழமை) முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, கட்சியின் செயற்குழுவினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிப்பதை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மேலும் இந்த மனுவை ஜூலை மாதம் 27ஆம் திகதி மீண்டும் விசாரணை எடுத்துக்கொள்வதாக தெரிவித்த நீதிமன்றம், மனுவின் பிரதிவாதிகளான ஐக்கிய தேசிய கட்சி தலைவர் மற்றும் பிரதி தலைவர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு அழைப்பாணை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை