பொறளையில் இருந்து புறக்கோட்டை வரை பேருந்து முன்னுரிமை திட்டம் இன்று ( திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. காலை 6 மணி முதல் 9 மணிவரை இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக அப்புகொட தெரிவித்தார். இதன் முதல் கட்டம் கடந்த 8 ஆம் திகதி காலி வீதியின் மொறட்டுவ முதல் ஒல்கொட் மாவத்தை வரை நடைமுறைப்படுத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார். பேருந்து முன்னுரிமை திட்டத்தின் மூலம் தனியார் பேருந்துகள், பயணிகள் போக்குவரத்து பேருந்துகள், மொபைல் பேருந்துகள், 20 க்கும் முற்பட்ட பயணிகளை கொண்ட பஸ்கள் ஆகியவற்றுக்கு பயணிக்க அனுமதி வழங்கப்படும்.
பொறளையில் இருந்து புறக்கோட்டை வரை பேருந்து முன்னுரிமை திட்டம் இன்று ( திங்கட்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
காலை 6 மணி முதல் 9 மணிவரை இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக அப்புகொட தெரிவித்தார்.
இதன் முதல் கட்டம் கடந்த 8 ஆம் திகதி காலி வீதியின் மொறட்டுவ முதல் ஒல்கொட் மாவத்தை வரை நடைமுறைப்படுத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
பேருந்து முன்னுரிமை திட்டத்தின் மூலம் தனியார் பேருந்துகள், பயணிகள் போக்குவரத்து பேருந்துகள், மொபைல் பேருந்துகள், 20 க்கும் முற்பட்ட பயணிகளை கொண்ட பஸ்கள் ஆகியவற்றுக்கு பயணிக்க அனுமதி வழங்கப்படும்.
கருத்துக்களேதுமில்லை