நயினாதீவு ஆலய விவகாரம்: பிரதமரின் அவசர உத்தரவையடுத்து படையினரிடம் விசாரணை

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க   நயினாதீவு நாகபூஷனி அம்மன்  ஆலய உற்சவத்தின்போது,  பாதுகாப்பு பணிகளில் இருந்த  படையினர், காலணிகளுடன் ஆலயத்துக்குள் சென்றமை  தொடர்பாக உடனடி விசாரணையை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக, வட.பிராந்தியப் பிரதிப் பொலிஸ்மா அதிபரை இன்று (திங்கட்கிழமை) காலை தொடர்புகொண்ட பிரதமர், உடனடி விசாரணையை வலியுறுத்தியுள்ளார்.

மேலும்  இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும்  பொலிஸ்மா அதிபரை அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த அறிவிப்பை தொடர்ந்து,  நயினாதீவுப் பகுதிக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சம்பந்தப்பட்ட படையினரை அழைத்து, விசாரணை நடத்தியிருப்பதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய  படையினர், தாம் வேண்டும் என்றே இவ்வாறு செய்யவில்லை எனவும் இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாது எனவும் உறுதியளித்துள்ளதாக கூறப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.