மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் வைரவிழா!
மட்டக்களப்பு ரோட்டரிக் கழகத்தின் 60 ஆண்டு நிறைவின் வைரவிழா பயனியர் வீதியில் அமைந்துள்ள ரோட்டரி நிலையத்தில் நடைபெற்றது.
ரோட்டரிக் கழகத்தின் நடப்பாண்டு தலைவர் வைத்திய கலாநிதி கருணாகரன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
மேலும் அங்கு முக்கிய நிகழ்வாக தொழில்நிலையில் அதிசிறப்பை வெளிப்படுத்தியோருக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இதன்படி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இருதய நிபுணர் க. அருள்நிதி மற்றும் கொவிட் 19 வைரஸை கண்டுபிடிக்கும் பீ.சீ.ஆர் பரிசோதனைகளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடாத்தும் நுண்ணுயிரியல் நிபுணர் வைதேகி ரஜீபன் பிரான்சிஸ், வைத்திய ஆய்வு கூட தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் கொரொனா தனிமைப்படுத்தல் உட்பட மாதிரிகள் சேகரிப்பு நடவடிக்கையில் அதிக பங்களிப்பு செய்த பிராந்திய தொற்று நோயியலாளர் வே.குணராஜசேகரம் ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
1960 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக் கழகமானது பல்வேறுபட்ட சமூக சேவைகளை ஆற்றிவருகின்றமை வெளிப்படை. அவ்விடயங்கள் இவை விழாவில் உரையாற்றியவர்களால் நினைவு கூரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை