நாட்டில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட வெலிசர முகாம் மீண்டும் திறப்
நாட்டில் அதிகளவான கடற்படையினர் கொரோனா தொற்றுக்கு உள்ளான வெலிசர கடற்படை முகாம் இரண்டரை மாதங்களுக்கு பின்னர் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் திறக்கப்படவுள்ளது.
இதன்படி, குறித்த கடற்படை முகாமின் கண்காணிப்பு பணிகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
இதேநேரம், வெளிசர கடற்படை முகாமை கொரோனா வைரஸ் தொற்றற்ற வலையமாக அறிவித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்கவின் ஊடாக கடற்படை பேச்சாளரிடம் கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இதற்கமைய, வெலிசர கடற்படை முகாமின் கண்காணிப்பு பணிகள் ஒவ்வொரு கட்டமாக ஆரம்பிக்கப்படும் என கடற்படை பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரியபண்டார குறிப்பிட்டார்.
வெலிசர கடற்படை முகாமில் பணியாற்றிய சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி அந்த முகாமை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதனையடுத்து, கடற்படையினர் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, வெலிசர கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதி கொரோனா தொற்று ஏற்படும் அபாய வலயமாக அறிக்கப்பட்டது.
அதேநேரம், நாட்டில் இதுவரையில் 898 கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை