களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக பழமையான வைத்தியசாலையான களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி இன்று (புதன்கிழமை) களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் முன் கவணஈர்ப்பு இடம்பெற்றது.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர், களுவஞ்சிக்குடி பிரதேச பொது அமைப்புக்கள். ஆகியோரின் ஏற்ப்பாட்டில் இந்த கவணஈர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இதன்போது ஆளனி பற்றாக்குறையை பூர்த்திசெய், வைத்தியர்களின் பற்றாக்குறையை பூர்த்தி செய் , நியமனங்களில் அரசியல் தலையீடு வேண்டாம் , களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் தேவைகளை பூர்த்தி செய். போன்ற சுலோகங்களை தாங்கியவாறு கவாணரீப்பு போராட்டம் முன்னெடுக்கபட்டது.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பௌதீக வளங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் வைத்தியர் பற்றாக்குறை நீன்டகாலமக நிலவி வருவதாகவும். இதனை தீர்த்து வைக்க உரியவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எணவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
53 வைத்தியர்கள் இருக்க வேண்டிய வைத்தியசாலையில் 14 வைத்தியர்களே கடமையாற்றுவதகவும் புதிதாக கடமையேற்று வரும் வைத்தியர்கள் அரசியல் செல்வாகினைப் பயன்படுத்தி இடமாற்றம் பெற்றுச் செய்வதாகவும் போராட்ட காரர்கள் கவலை தெரிவித்தனர்.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவு உட்பட முக்கிய சிகிச்சை பிரிவுகள் அமைக்கபட்டுள்ள நிலையிலும் அவை வைத்தியர்கள் இல்லாத காரணத்தால் சிகிச்சையளிக்க முடியாத நிலையில் மூடப் பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் கலந்து கொண்டுடோர் தெரிவித்தன.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் ஏற்ப்பட்டுள்ள வைத்திய பற்றாக்குறை காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலை வரும் நோயாளிகளின் நீன்ட நேரம் வைத்தியசாலையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாகவும், குறிப்பிட்டளவு வைத்தியர்கள் இருப்பதன் காரணமாக அதிகளவான நோயாளிகளுக்கு சிக்கிச்சையளிக்க சந்தர்ப்பம் இல்லாத நிலமை காணப்படுகிறது.
அரசாங்கம் இந்த நிலமையை கருத்தில் கொண்டு வைத்தியசாலையின் வைத்தியார் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கினானர்.
கருத்துக்களேதுமில்லை