பிரித்தானியாவல் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 154 பேர் தாயகம் திரும்பினர்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவல் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 154 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்

விசேட விமானத்தின் மூலம் அவர்கள் இன்று (புதன்கிழமை) இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து விமான நிலையத்தில் அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஹோட்டல்களில் அவர்களை தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.