யாழ்.நயினாதீவுக்கு செல்ல பாஸ் நடைமுறை மனித உரிமை ஆனைக்குழுவில் முறைப்பாடு!

நயினாதீவு பிரதேசத்;துக்கு உள்ஞழைவதற்கோ வெளிச் செல்வத்ற்கோ பாஸ் நடைமுறை காணப்படுகின்றமைக்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் மங்களேஸ்வரன் கார்த்தீபன், கருணாகரன் குணாளன் ஆகியோரால் முறைப்பாடு கடந்த 22 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

குறித்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு:-

நயினாதீவுப் பிரதேசம் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளடங்குகின்றது. தற்போது இலங்கையின் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுமதிப்பத்திரம் பெறாமல் செல்லக்கூடிய இயல்புநிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் நயினாதீவை சொந்த இடமாகக் கொண்ட என்னால் – எனது பிரதேசத்துக்குச் செல்வதற்கு – அனுமதிப்பத்திரம் பெறவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைமை காணப்படுகின்றது என்று ம.கார்த்தீபனின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாகரன் குணாளனினன் முறைபபாட்டில் –

நயினாதீவு பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களில் பலர் வாழ்வாதார நிலையில மிகவும் பின்தங்கியவர்கள். அவர்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டங்களை வழங்கவென நாம் கடந்த 22 ஆம் திகதி சென்றிருந்தோம். அதன்போது புங்குடுதீவு குறிகட்டுவான் இறங்குதுறையில் அங்கு பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலீஸார் மற்றும் கடற்படையினர் என்னைத் திருப்பி அனுப்பியுள்ளனர். எமது மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு உதவுவதற்கு அனுமதிப்பத்திரம் பெறவேண்டிய சூழல் காணப்படுகின்றது – இவ்வாறு அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.