11 இளைஞர்கள் கடத்தல் விவகாரம் – வழக்கு விசாரணைகளுக்கு இடைக்காலத் தடை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவிற்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வழக்கு விசாரணைகளை இடைநிறுத்துமாறு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்கே உயர்நீதிமன்றம் இவ்வாறு இடைக்கால தடை விதித்துள்ளது.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கில், 14ஆவது சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ள அட்மிரல் வசந்த கரன்னகொட, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னைக் கைது செய்யக்கூடும் என்பதால் தலைமறைவாகியிருந்தார்.

மேலும் தன்னை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு தடை விதிக்கக்கோரி, அட்மிரல் கரன்னகொட உச்சநீதிமன்றில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்திருந்தார்.

எனினும் உச்சநீதிமன்றம் அட்மிரல் கரன்னகொடவைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்ததுடன், அவரை குற்றப்புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகும்படி அழைப்பாணையும் அனுப்பியிருந்தது.

அதற்கமைய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.