கிளிநொச்சியில் முகாமைத்துவப் பயிற்சிக் கட்டடம் ஆளுநரால் திறந்துவைப்பு

கிளிநொச்சியில் நிர்மாணிக்கப்பட்ட வடக்கு மாகாண முகாமைத்துவ பயிற்சி அலகுக்கான கட்டடம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, கனகபுரம் பகுதியில் 123 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்தக் கட்டடத்தை வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ளஸ் இன்று (வியாழக்கிழமை) திறந்துவைத்துள்ளார்.

இந்த கட்டடத் திறப்பு விழாவில், மாவட்ட அரச அதிபர், வலயக் கல்விப் பணிப்பாளர், திணைக்கள அதிகாரிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

வடக்கு மாகாணத்தில் உள்ள திணைக்களங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகளை வழங்கும் வகையில் இந்த அலகு திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.