மாதனிதர் ரவிராஜ் கிழக்கு மாகாணத்தை நேசித்த தலைவர் – அரியநேத்திரன்
June 25th, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.
மறைந்த மாமனிதர் நடராஜா ரவிராஜ் எமது கிழக்கு மண்ணை நேசித்த ஒரு ரைவர் அவர்தமிழ்தேசிய்கூட்டமைப்பு பாராளுமனரற உறுப்பினராக செயல்பட்ட காலத்தில் நான் அதனைபுரிந்துகொண்டேன் என கூறினார் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்பட்டிருப்பு்தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன்.
யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரர் மாமனிதர் நடராஜா ரஙிராஜ் அவர்களின் பிறந்த தினத்தைமுன்னிட்டு்மேலும் கூறுபையில்.
கடந்த 2004,ம் ஆண்டு வடக்கு கிழக்கில் இருந்து தமிழ்தேசிய்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக22,உறுப்பினர்கள் நாம் நாடாளுமன்றத்தில் செயல்பட்டோம் அந்த காலம் மிகவும் அச்சுறுத்தல் உயிர்ஆபத்துக்கள் நிறைந்த காலமாகும்.
விடுதலைப்புலிகளில் இருந்து கருணா என்கிற முரளிதரன் பிரிந்து சென்று இராணுவத்துடன் இணைந்துவிடுதலைப்புலிகளையும் பொதுமக்களையும் காட்டிக்கொடுத்து செயல்பட்ட காலம்.
அந்தவேளையில்தான் 2006,ல் திருகோணமலை மாவிலையாற்றில் இராணுவத்திற்கும் விடுதலைபுலிகளுக்கும்இடையில் போர் ஆரம்பிக்கப்பட்டு திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த சம்பூர் மூதூர் பகுதிமக்கள்மட்டக்களப்பு வாகரையில் தஞ்சம் அடைந்திருந்த காலம்.
அன்று கடந்த 2006,நவம்பர் 8,ம் திகதி வாகரையில் அகதிமுகாம்களில் தங்கி இருந்த அப்பாவிபொதுமக்கள்மீது இராணுவம் மேற்கொண்ட எறுகணை்தாக்குதலால் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டும்நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர்.
அப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 22,பேரும் சம்மந்தன் ஐயா தலைமையில் கொழும்பு நகரில்ஐநா செயலகத்திற்கு முன்பாக மறுநாள் 2006,நவம்பர்,9ம் திகதி ஒரு கவன ஈர்ப்புபோராட்டத்தை்நடத்தினோம். இவ்வாறான ஒரு போராட்டம் மட்டக்களப்பு வாகரையில் இடம்பெற்றஇராணுவத்தினரின் தாக்குதலை கண்டித்து மாமனிதர் ரவிராஜ் அவர்களே ஏற்பாடு செய்திருந்தார்.
அந்தப்போராட்டம் இடம்பெற்றபின் மாமனிதர் ரவிராஜ் என்னிடம் கூறினார்” மச்சான் நாளை காலை எனதுவாகனத்தில் நீயும் நானும் வாகரைக்கு போய் நேரடியாக அங்கு நடந்த குண்டுத்தாக்குதலை்பார்த்துவருவோம்எவருக்கும் கூறாமல் போய் பார்த்து வருவோம்” என்றார் நானும் ஆம் என்று கூறினேன்.
அந்தக்காலம் தமிழ்தேசிய கூட்டமைப்பு 22, பாராளுமன்ற உறுப்பினர்களும் சொந்த மாவட்டங்களுக்கு செல்லமுடியாமல் கொழும்பில் முடக்கப்பட்டிருந்த காலம் அச்சம் உயிர் ஆபத்து நிறைந்த காலம் அதற்கு முன்புதான்2005,டிசம்பர்,25 நத்தார் நள்ளிரவு ஆராதனையில் மட்டக்களப்பு புனித மரியார் தேவாலயத்தில் வைத்துபாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பர்ராச்சிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டகாலம் அதனால் எந்தபாராளுமன்ற உறுப்பினர்களும் சொந்த மாவட்டங்களுக்கு செல்லமுடியாத காலம்.இவ்வாறான நிலையில்தான்வாகரைக்கு நானும் நண்பர் மாமனிதர் ரவிராஜ அவர்களும் 2006 நவம்பர் 10, ம் திகதி காலையில் செல்வதாகஎன்னிடம் கூறினார்.
ஆனால் அன்று நான் மாதிவெல பாராளுமன்ற விடுதியில் அவரை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்மாமனிதர்்ரவிராஜ் அவரின் கொழும்பு இல்லத்தில் இருந்து தமது வாகனத்தில் வரும்போதுதான் அவர் அன்றுசுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த செய்தியை என்னிடம் ஒரு ஊடகவியாளர் கூறினார் நான் எனது தொலைபேசியை நண்பர் மாமனிதர்ரவிராஜின் இலக்கத்துக்கு அழுத்தியபோது்தொடர்பு அவரின் தொலைபேசிக்கு சென்றது அவர்கதைக்கவில்லை.
உடனே நானும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் தேசிய வைத்தியசாலைக்கு சென்று பார்த்போதுஅவரின் பிரிவு எமக்கு்தாங்கமுடியாத வேதனையை தந்தது.
உண்மையில் மாமனிதர் ரவிராஜ் அவர்கள் மட்டக்களப்பு வாகரைக்கு வருவதற்காக என்னை அழைத்துசெல்வதற்கு அன்று இருக்கும் நிலையிலேயே அவரை இடைமறித்து்சுட்டுக்கொன்றனர்.
கொழும்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பினராகிய எம்மால் நடத்தப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டத்தைஏற்பாடு்செய்த மாமனிதர் ரவிராஜ் அவர்கள் என்பதாலும் இனிமேல் எந்த ஒருபோராட்டமும் கொழும்பில் எந்தஇடத்திலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொள்ளகூடாது என்பதற்குமான எச்சரிக்கையாகவே நண்பர்மாமனிதர் ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரின் பிறந்த நாள் இப்போது இடம்பெறும் வேறையில் சரியாக அவர் உயிர்தீத்து 19, வருடங்கள் கடந்துஇடம்பெறும் பொதுத்தேர்தலில் அன்னாரின் துணைவியார் யாழ்மாவட்டத்தில் தமிழ்தேசிய்கூட்டமைப்புசார்பாக வரேயொரு பெண் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார் மாமனிதர் ரவிராஜ் அவர்களின் சேவைகளைமுன்எடுக்க்பொருத்தமான ஒரு வேட்பாளராக மாமனிதர் ரவிராஜ் அவர்களின் துணைவியாரை யாழ்மாவட்டமக்கள் முழு ஆதரவு வழங்குவது காலத்தின் தேவை எனவும் மேலும் கூறினார்.
கருத்துக்களேதுமில்லை