விலை போகும் வேட்பாளர்கள் எம்மிடம் இல்லை – சஜித்!
பணத்திற்கு விலை போகக்கூடிய எந்தவொரு வேட்பாளர்களும் தங்களிடம் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு பணத்திற்கு விலை போகக்கூடிய வேட்பாளர்கள் அனைவரும் தங்களிடமிருந்து வெளியேறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் சிலர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மஹிந்த அணியுடன் இணைந்து கொண்டுள்ள நிலையில், சஜித் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை