கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு!
கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாளை இரவு 10 மணி முதல் நாளை மறுதினம் பிற்பகல் 04 மணி வரையிலான 18 மணி நேர காலப்பகுதிக்குள்ளாயே இவ்வாறு நீர் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.
இதன்படி, கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், கொழும்பு 1, 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படு உள்ளது.
நீர் குழாய்களில் திருத்தப்பணி காரணமாகவே குறித்தப் பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை