ஐ.தே.க அரசாங்கமே சிறுபான்மை மக்கள் மீது அதிக அக்கறை காட்டியது- விஜயகலா

ஐக்கிய தேசியக்  கட்சியின் ஆட்சிக் காலத்தில்தான் சிறுபான்மை மக்களின் தீர்வு குறித்து முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக விஜயகலா மகேஸ்வரன்  தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின்  முதன்மை வேட்பாளருமான விஜயகலா மகேஸ்வரன்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில்தான் சிறுபான்மையினராகிய தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு தொடர்பில் சர்வதேச ரீதியில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது இது அனைவரும் அறிந்த விடயமே.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில்தான்  விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் வெளிநாடுகளில் இடம்பெற்றிருந்தன, அதேபோல கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அவர்களின் முயற்சியின் பயனாகவே புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தின் மூலம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு  தீர்வுக்கு முயற்சி எடுக்கப்பட்டது.

ஏனைய அரசாங்கங்களோடு ஒப்பிடும்போது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமானது சிறுபான்மை இனத்தவர்களாக ஆகிய தமிழ் முஸ்லிம் மக்கள் மீது அதிக அக்கறை காட்டியதோடு ஜனநாயக ஆட்சியை மேற்கொண்டது.

அத்தோடு மட்டுமல்லாது வடக்குகிழக்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் பல்லாயிரம் கோடி நிதியில் அபிவிருத்தியும் மேற்கொள்ளப்பட்டது அதை நீங்கள் அனைவரும் அறிந்ததே கடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் போது வடபகுதியில்  பெருமளவு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என  தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.