அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் பேராசிரியர் ஜயந்த தனபால இராஜினாமா

அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் பேராசிரியர் ஜயந்த தனபால அனுப்பிய இராஜினாமா கடிதத்தை பேரவை ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பேராசிரியர் ஜயந்த தனபால உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி அரசியலமைப்பு சபையில் இருந்து இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பேரவையின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக கண்டியில் இருந்து கொழும்புக்கு பயணம் செய்வதில் உள்ள சிரமங்கள் குறித்தும் அரசியலமைப்பு பேரவைக்கு அவர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இந்த வெற்றிடத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒருவரை நியமிக்கும் அதேவேளை அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் படி நாடாளுமன்ற அதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்.

எனவே இந்த வெற்றிடத்திற்கான புதிய நியமனம் பொதுத்தேர்தலை அடுத்து புதிய நாடாளுமன்றத்தால் நிரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.