இலங்கையின் எல்லைப் பகுதி பலவீனமாக காணப்படுகின்றது- அமெரிக்கா எச்சரிக்கை
இலங்கையின் கடல் சார்ந்த எல்லைப் பகுதிகள் பலவீனமான நிலையிலேயே தொடர்ந்து காணப்படுகின்றதென அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டில் அனைத்து நாடுகளிலும் காணப்பட்ட பயங்கரவாத நிலைமை குறித்து வெளியிட்டுள்ள தனது வருடாந்த அறிக்கையிலேயே அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில் இலங்கை தொடர்பாக கூறியுள்ளதாவது, இலங்கையின் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு பலவீனமாகவே காணப்படுகின்றது.
மேலும் இலங்கை அரசாங்கம், ஜப்பான் மற்றும் ஐக்கிய நாடுகள் ஆகியவற்றுடன் இணைந்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் எல்லை முகாமைத்துவ நடவடிக்கைகளை விரிவாக்குதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
அத்துடன், கடல் சார்ந்த எல்லைப் பகுதிகளை பாதுகாக்க அமெரிக்காவுடன் தனது இணைப்பை விஸ்தரித்துள்ளது.
இலங்கை கரையோர ரோந்து பணியில் ஈடுபடும் படைப்பிரிவினருக்கும் கடற்படையினருக்கும் அமெரிக்க எல்லை பாதுகாப்பு படையினர், கடல்சார் சட்டங்களை நடைமுறைப்படுத்தி, பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்” என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை