தனது ஆட்சியில் எரிபொருள் விலையை குறைப்பதாக சஜித் உறுதி
பொதுமக்களுக்கு தனது அரசாங்கத்தின் கீழ் எரிபொருள் சலுகைகள் வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அகலவத்தையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் பேசிய அவர், தற்போது குறைக்கப்பட்ட எரிபொருள் விலையின் பலன்களை மக்கள் அனுபவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை தற்போதைய அரசாங்கம் ஹிட்லரைப் போன்ற ஒரு ஆட்சியை மேற்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
அத்தோடு பல வாக்குறுதிகளை வழங்கிய இந்த அரசாங்கத்தினால் மக்களுக்கு எவ்வித நன்மையையும் ஏற்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை பேரணியில் உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் தவறிவிட்டது என குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை