ஓகஸ்ட் 5 இல் இனவெறி மற்றும் மத வேறுபாடுகள் பயன்படுத்தப்பட்ட ஒரு சகாப்தம் முடிவுக்கு வரும் – சஜித்
இனவெறி மற்றும் பிரிவினைவாதம் பரவிய சகாப்தம் ஓகஸ்ட் 5 ஆம் திகதியுடன் முடிவடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பேருவாலை பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், அனைத்து தேசபக்தர்களும் ஐக்கிய மக்கள் சக்தியைச் சுற்றி திரண்டுள்ளனர் என கூறினார்.
கொரோனா வைரஸ் என்ற போர்வையில், இனவெறி, மத வேறுபாடு போன்ற பிரச்சினைகளை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் சமமாக இருக்கும்படி புத்தர் தெரிவித்ததன்படி இலங்கை அதன் ஆட்சியில் தூய பௌத்த கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறினார்.
இந்நிலையில் ஓகஸ்ட் 5 ஆம் திகதி, இலங்கையர்களுக்குள் மோதலை ஏற்படுத்த இனவெறி மற்றும் மத வேறுபாடுகள் பயன்படுத்தப்பட்ட ஒரு சகாப்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.
மேலும் இனவெறி மற்றும் மத வேறுபாடுகளை நிராகரிக்க பிரேமதாச சிங்கள பௌத்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன் இது பௌத்த மதத்தின் வழி அல்ல என்றும் மாறாக நாட்டை அழிக்கும் சிந்தனை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை