மஸ்கெலியாவில் தீ விபத்து – இரு வீடுகள் தீக்கிரை
மஸ்கெலியா – லெங்கா தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.
இந்த தீ விபத்து நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ள நிலையில், ஒரு வீடு முழுமையாகவும் மற்றுமொரு வீடு பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இந்த விபத்து தொடர்பாக கேள்வியுற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து நிலைமைகளை கேட்டறிந்தார்.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களை பாதுகாப்பான இடமொன்றில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ததுடன், அவர்களுக்கு 14 நாட்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களை தனது சொந்த நிதியில் வழங்கியுள்ளார்.
அத்துடன், மின் ஒழுக்கு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவ்வாறு இருப்பின், அதனை சீர்செய்யுமாறு தோட்ட முகாமைத்துவ அதிகாரிகளிடம் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை